பிரான்ஸில் குளிர்காலத்தில் கரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: விஞ்ஞானிகள் தகவல்

By செய்திப்பிரிவு

பிரான்ஸில் குளிர்காலத்தில் கரோனாவின் இரண்டாம் கட்டப் பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரான்ஸ் விஞ்ஞானிகள் தரப்பில், “பிரான்ஸில் குளிர்காலத்தில் இரண்டாம் கட்டப் பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஸ்பெயினில் ஏற்பட்ட நிலை உண்டாகலாம். சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றாமல் இருந்தால் கோடைக் காலத்திலும் கரோனா பரவல் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் ஊரடங்கு விதிக்கப்பட்ட பிறகு கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவந்த பிறகு கரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து மெதுவாக மீண்டு வரும் பிரான்ஸ் ஊரடங்கை நீக்கி அதன் வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்பியுள்ளது.

ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளைப் போல கரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸும் கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன. தற்போது பொருளாதாரத்தைச் சீர்செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸில் 1,91,295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,294 பேர் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்