அதிவேக கோவிட் 19 சோதனைகள்; 90 நிமிடங்களில் முடிவுகளை அறியலாம்- பிரிட்டனில் அறிமுகம்

By செய்திப்பிரிவு

90 நிமிடங்களில் கரோனா வைரஸ் முடிவுகளை அறியும் வகையில் இரண்டு அதிவேக கோவிட் 19 சோதனைகள் பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவை பிரிட்டன் மருத்துவமனைகள், இல்லங்கள் மற்றும் காப்பகங்களில் விரைவில் அமலுக்கு வரும் என்று பிரிட்டன் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை LamPORE (லேம்போர்) ஸ்வாப் சோதனைகள் மற்றும் DnaNudge (டிஎன்ஏநட்ஜ்) சோதனைகள் என்று அழைக்கப்படுகின்றன.

லேம்போர் ஸ்வாப் சோதனைகளை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான ஆக்ஸ்ஃபோர்டு நானோபோர் என்னும் நிறுவனம் வழங்குகிறது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் துணை நிறுவனரும் இந்திய வம்சாவளியுமான, கார்டன் சங்கேரா கூறும்போது, ''லேம்போர் சோதனைகள் ஸ்வாப் மற்றும் உமிழ்நீர்ப் பரிசோதனைகள் மூலம் 60 முதல் 90 நிமிடங்களில் கரோனா வைரஸ் இருப்பதைக் கண்டறிந்துவிடும்.

கோவிட் 19 மட்டுமல்லாது பிற வைரஸ் கிருமிகளையும் இவை கண்டுபிடிக்க வல்லவை. அடுத்த வாரத்தில் இருந்து 450,000 லேம்போர் சோதனை உபகரணங்களை எங்கள் நிறுவனம் உருவாக்கி அளிக்கும்'' என்றார்.

அடுத்த விரைவுப் பரிசோதனை டிஎன்ஏக்களைப் பயன்படுத்தி வைரஸ்களைக் கண்டறிகிறது. டிஎன்ஏநட்ஜ் என்னும் நிறுவனம் சார்பில் 58 லட்சம் சோதனைகள் செப்டம்பரில் தொடங்க உள்ளன. இதற்காக 5 ஆயிரம் டிஎன்ஏ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவை பிரிட்டன் மருத்துவமனைகள், இல்லங்கள் மற்றும் காப்பகங்களில் விரைவில் அமலுக்கு வர உள்ளன என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்