வியட்நாமில் 99 நாட்களுக்குப் பிறகு திரும்பிய கரோனா

By செய்திப்பிரிவு

99 நாட்களுக்குப் பிறகு வியட்நாமில் மீண்டும் கரோனா பரவ தொடங்கியுள்ளது அந்நாட்டு மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

9 கோடிக்கு அதிகமான மக்கள் தொகைக் கொண்ட வியட்நாம், உலக நாடுகள் கரோனா பரவலின் தீவிர தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் கரோனாவை கட்டுப்படுத்தி முன் உதாரணமாக இருந்தது .

அது மட்டுமல்லாது வியட்நாமில் யாரும் சமூக தொற்றால் பாதிக்கப்படாமல் இருந்தனர். மேலும் கரோனாவால் எந்த உயிரிழப்பு நிகழாமல் இருந்தது.

இந்த நிலையில் 99 நாட்களுக்குப் பிறகு வியட்நாமில் மீண்டும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் 48 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் 6 பகுதிகளில் கரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பிரபல சுற்றுலா தளமான டா நாங்கில் சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் நடவடிக்கை வேகமாக நடந்து வருகிறது.

சுற்றுலாப் பயணிகள் உட்பட 80,000 பேர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ், ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது.

கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.

உலகம் முழுவதும் சுமார் 1.6 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

தொழில்நுட்பம்

49 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்