சீனா மீது ட்ரம்ப் மீண்டும் விமர்சனம்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனா மீது மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் சீனா குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்

அதற்கு ட்ரம்ப் பதிலளிக்கும்போது, “சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் நான் பேசவில்லை. சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதுமில்லை. வைரஸை மறைத்து அதை உலகிற்கு கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இதில் சீனாவுக்கு முழுப் பொறுப்பு உள்ளது. இதனை அவர்கள் நிறுத்தியிருக்கலாம். அவர்கள் நிறுத்தியிருக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாகத்தான் இருந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் தொடர்பாக ஆரம்பம் முதலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவை விமர்சித்து வருகிறார்.

சீனாவிலுள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டை ட்ரம்ப் முன்வைத்தார். இது தொடர்பாக அமெரிக்கக் குழு வூஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய சீனா அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், அமெரிக்காவின் கோரிக்கையை சீனா மறுத்துவிட்டது.

வர்த்தக ரீதியாகவும் சீனா, அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளும் மாறி மாறி வரி விதிப்பில் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தகக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

29 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்