நேபாளத்தில் ஜூலை 22 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா பரவலைத் தடுக்க நேபாளத்தில் ஜூலை 22 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர். கரோனா பரவலைத் தடுக்க ஒரே வழியாக ஊரடங்கை மட்டுமே உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. அந்த வகையில் ஜூலை 31 ஆம் தேதிவரை ஊரடங்கை உலக நாடுகள் நீட்டித்துள்ளன. இந்த நிலையில் நேபாளமும் ஊரடங்கை ஜூலை 22 ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது.

இதுகுறித்து நேபாளம் அரசுத் தரப்பில், ''திங்கட்கிழமை மாலை நடத்தப்பட்ட அமைச்சர்கள் சந்திப்பைத் தொடர்ந்து தற்போது நிலவும் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 22 ஆம் தேதிவரை நேபாளத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நேபாளம் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “வணிகப் பாதைகள் தவிர பிற எல்லைகள் மூடப்படும். அவசரத் தேவைகளைத் தவிர்த்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள் ஆகியவை மூடப்படும்” என்று தெரிவித்தார்.

நேபாளத்தில் கரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 90% வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள். பெரும்பாலும் அவர்கள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்களுக்குக் கரோனா அறிகுறிகள் இல்லை.

மேலும், நேபாளத்தில் உள்ள 77 மாவட்டங்களில் 75 மாவட்டங்களில் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளது என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது.

கரோனாவை எதிர்கொள்வதற்காக நேபாள அரசு சுகாதார நடவடிக்கைகளுக்கு அதிகம் செலவிட்டு வருகிறது. மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, உணவின்றித் தவித்து வருபவர்களுக்கு உணவு வழங்குதல் போன்ற செயல்பாடுகளுக்கும் அந்நாட்டு அரசு செலவிட்டு வருகிறது.

இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள போதிய நிதியின்றித் திணறி வரும் நேபாள நாட்டுக்கு சர்வதே நாணய நிதியம் (ஐஎம்எஃப்) 214 மில்லியன் டாலர் நிதி வழங்க கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் இதுவரை கரோனா தொற்றால் 13,248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,134 பேர் குணமடைந்த நிலையில். 29 பேர் பலியாகினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

18 mins ago

க்ரைம்

24 mins ago

க்ரைம்

33 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்