திவாலாவதைத் தடுக்க வேண்டும்; கரோனாவால் 90 ஆண்டுகளில் இல்லாத மோசமான பொருளாதாரச் சீரழிவை தென் ஆப்பிரிக்கா சந்திக்கிறது: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் வேதனை

By பிடிஐ


கரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பால் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குமோசமான பொருளாதாரச் சீரழிவை நாடு சந்திக்க இருக்கிறது என்று தென் ஆப்பிரிக்க நிதியமைச்சர் டிடோ போவெனி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது குறிப்பிட்டார்

தென் ஆப்பிரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நிதியமைச்சர் டிடோ போவெனி பேசியதாவது:

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நாட்டின் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 7.2 சதவீதம் அளவுக்கு பொருளதாார வளர்ச்சி குறையும் என எதிர்பார்க்கிறோம்.

கடந்த 90 ஆண்டுகளில் சந்தித்திராத மோசமான சீரழிவை நாம் இப்போது சந்திக்கிறோம். பொருட்களின் விலை கடுமயைாக உயர்ந்துள்ளன,. கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. ஏற்றுமதி மிகக்குறைவாகவே இருக்கிறது. உலகளவாகிய தேவையும் குறைந்துள்ளது, பொருளாதார நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் தென் ஆப்பிரிக்க நாடு வாங்கியுள்ள கடனும் மேலும் நம்முடைய நிதிச்சூழலை கடுமையாக்கியுள்ளது. இந்த ஆண்டு அரசுக்கு எதிர்பார்த்த அளவு வரிவருவாய் இருக்காது. இதனால் வாங்கிய கடனுக்கு அரசு 21 சதவீதம் வட்டி செலுத்த வேண்டியது இருக்கும். இந்த வட்டி என்பது மிகமிக உயர்வாகும். அரசு கடனைக் குறைத்தால்தான், மக்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க முடியும், முதலீட்டையும் வளர்ச்சியையும் ஊக்கப்படுத்த முடியும்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் போரில் அரசுடன் சேர்ந்து தனியார்அமைப்புகளும் ஈடுபட்டது பாராட்டுக்குரியது. ஆனால் லாக்டவுனால் ஏற்பட்ட வேலையின்மை, பட்டினி போன்றவை இன்னும் நாட்டில் கவலையளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது

இதற்கு முன் இதுபோல் தனியார் துறை, மத்திய வங்கி, சமூக அமைப்புகள், தொழிலாளர்கள் ஆகியோருடன் நெருக்கமாக அரசு சார்பில் பணியாற்றியது இல்லை. கரோனா வைரஸ் பரவலைச் சமாளிக்க 50 ஆயிரம் கோடி நிதியை அரசுஒதுக்கீடு செய்தது. இது வளர்ந்துவரும் நாடுகளில் ஒதுக்கீடு செய்த மிக அதிகபட்ச தொகையாகும்

20 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வங்கிகளுக்கு 3 ஆயிரம் கோடி ராண்ட் வழங்கப்பட்டுள்ளது. காப்பீடு நிறுவனங்கள், மருத்துவக் காப்பீடு நிறுவனங்களுக்கு ப்ரீமியம் விடுமுறை நாட்கள் வழங்கப்பட்டன, நிலச்சுவான்தார்கள், வாடகைக்கு வீடு, இடங்களை விடுபவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

அரசின் இந்த செலவுகளால் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதிய முதலீட்டுக்கும் இனிவரும் காலங்களில் சாத்தியமில்லை, வரிவருவாயையம் போதுமன அளவு எதிர்பார்க்க முடியாது என்பதால், நாட்டின் செலவுகளைச் சமாளிக்க வெளிப்புற உதவியை நாடப்போகிறோம்.

இதற்காக 700 கோடி டாலர் நிதியை சர்வதேச அளவில் கடன் பெறப் போகிறோம். அரசு கண்டிப்பாக எந்ததவறும் செய்யாது, வரிவருவாய்க்கு வழியில்லாததால் கடன் பெறப்போகிறோம், இதைத் திருப்பிச் செலுத்துவோம்.

தென் ஆப்பிரிக்க நாடு திவால்நிலையை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக கரோனா வைரஸை எதிர்த்துப் போராட கூடுதல் செலவுகள் எதிர்பார்க்கப்படுவதால், நாட்டின் பொருளாதாரத்தை மீட்க ஒவ்வொருவரும் தங்களை பங்களிப்பை செலுத்த வேண்டும்.

நாம் வாங்கிய கடனுக்கு வட்டி அதிகரித்து வருகிறது. மக்களுக்கு செலவு செய்யும் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், மக்கள் ஏழ்மை நிலைக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. கடந்த 1920 களில் ஜெர்மனியில் ஏற்பட்ட நிலைமை, 2000 ஆண்டில் அர்ஜென்டியா, ஜிம்பாப்வேயில் ஏற்பட்ட நிலைமை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிரீஸில் ஏற்பட்ட நிலை இப்போது நமக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு நிதியமைச்சர் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்