ஈரானில் கரோனா இறப்பு 10,000-ஐ நெருங்குகிறது

By செய்திப்பிரிவு

மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளான ஈரானில் கரோனா பலி எண்ணிக்கை 10,000-ஐ நெருங்குகிறது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், "ஈரானில் கரோனாவால் இதுவரை 2,12,501 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 133 பேர் பலியானதைத் தொடர்ந்து 9,996 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். சுமார் 1,72,096 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அலட்சியம் செய்யாமல் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும், மசூதிகளில் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், பொது இடங்களில் மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

ஈரானில் ஐந்தில் ஒருவருக்குக் கரோனா தொற்று இருக்கக்கூடும் என்று அந்நாட்டில் கரோனா தடுப்பு தொடர்பாக உருவாக்கப்பட்ட பணிக்குழு உறுப்பினர் எஹ்சன் மோஸ்டபாவி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ஈரானில் மார்ச் மாதத்தில் கரோனா பரவல் உச்சம் அடைந்தது. அதே காலகட்டத்தில் கடும் பாதிப்பை எதிர்கொண்ட ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் தொற்று எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. ஆனால், ஈரானில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்