பிரிட்டனில் இரண்டாம் கட்டப் பரவல்தான் உண்மையான ஆபத்து: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பிரிட்டனில் இரண்டாம் கட்ட கரோனா பரவல்தான் உண்மையான ஆபத்து என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பிரிட்டனின் அரசியல் தலைவர்களுக்கு மருத்துவ நிபுணர் குழு கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடித்தத்தில், “பிரிட்டனில் கரோனாவின் எதிர்காலப் பரவல் கணிக்க முடியாத அளவில் உள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி பிரிட்டனில் கரோனாவின் இரண்டாம் கட்டப் பரவல் உண்மையில் ஆபத்தானதாக இருக்கும். வைரஸைக் கட்டுப்படுத்தத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது” என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமையன்று அடுத்தமாதத் தொடக்கத்தில் விடுதிகள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவை திறக்கப்படும் என்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த அறிவிப்பை மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

சீனா மற்றும் தென்கொரியாவில் கரோனாவின் முதல்கட்டப் பரவல் முடிந்த நிலையில் இரு நாடுகளிலும் தற்போது இரண்டாம் கட்டப் பரவல் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு கரோனா மருத்துவப் பரிசோதனைகளை அந்நாட்டு அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா ஐந்து மாதங்களுக்கு மேலாக 200-க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன.

இந்த நிலையில் ஆபத்தான கட்டத்தில் உள்ள கரோனாநோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் திறன் கொண்ட டெக்ஸாமெதாசோன் மாத்திரைகளை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்