கரோனா தொற்றுக்கு இடையே இயல்பு நிலைக்குத் திரும்பும் எகிப்து

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு இடையே ஓட்டல்கள் மற்றும் விடுதிளைத் திறக்க எகிப்து அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து எகிப்து சுற்றுலாத் துறை அமைச்சகம் தரப்பில், ''கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் எகிப்தில் சுமார் 266 ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சுகாதாரச் சான்றிதழை அளித்த பிறகே இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் சர்வதேச விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எகிப்து தெரிவித்தது.

எகிப்து தலைநகர் கெய்ரோவிலும், மற்றொரு முக்கிய நகரமான கிசாவிலும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனைத் தடுக்கும் நடவடிக்கையில் எகிப்து அரசு ஈடுபட்டுள்ளது.

9.84 கோடி மக்கள்தொகை கொண்ட எகிப்தில், இதுவரையில் 52,211 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 13,928 பேர் குணமடைந்துள்ளனர். 2,017 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களாக இதுவரை சந்தித்திராத பொருளாதார இழப்பை உலக நாடுகள் சந்தித்துள்ளன. இந்த நிலையில் தொற்றுக்கு இடையிலும் மருத்துவ வழிகாட்டுதலைப் பின்பற்றி பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் நாடுகள் தயாராகி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

விளையாட்டு

27 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்