ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 5,69,063 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,972 பேருக்கு கரோனா பாதித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் தேசிய கரோனா தடுப்பு மையம் தரப்பில், “ ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,972 பேருக்கு கரோனாதொற்று ஏற்பட்டுள்ளது. 181 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,69,063 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 7,841 ஆகவும் பதிவாகி உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்யாவில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகவே ரஷ்யாவில் 8,000 பேர்வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் மாஸ்கோவில் தளர்வுகளை அறிவித்தது ரஷ்ய அரசு.

கரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. இந்த நிலையில் கரோனா இறப்பு எண்ணிக்கை ரஷ்யாவில் குறைவாக உள்ளதைத் தங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

உலக சுகாதார அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

பொதுவெளிகளில் மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மட்டுமே தற்போது வரை கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஆலோசனையாக வழங்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்