உலக மசாலா: க்யூவில் நிற்கும் ரோபோ!

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லூசி கெல்லி பிரத்யேகமான ஐபாட் ரோபோவை வைத்திருக் கிறார். அவர் வேலை செய்து வரும் நிறுவனத்தில் 6 ரோபோக்கள் இயங்கி வருகின்றன. ஆப்பிள் ஐபோன்களின் தீவிரமான விசிறி லூசி கெல்லி. புதிய போன் அறிமுகம் ஆகும் போது மணிக்கணக்கில் வரிசையில் நின்று முதல் பத்து நபர்களுக்குள் ஐபோனை வாங்கி விடுவார். இதற்காக அடிக்கடி விடுமுறை போட வேண்டியி ருந்தது. மணிக்கணக்கில் நிற்பதால் கால் வலியும் நேரத்தை வீண் செய்கிறோம் என்ற குற்ற உணர்வும் இருந்தது. லூசி கெல்லியின் பிரச்சினையைத் தீர்த்துவைக்க முன்வந்தது அவரது அலுவலகம். கலிஃபோர்னியா நிறுவனம் தயாரித்த ஐபாட் ரோபோ ஒன்றை லூசிக்கு வழங்கியது. இந்த ஐபாட் திரையில் எங்கிருந்தாலும் லூசியின் முகம் தெரியும்.

‘‘ஆப்பிள் கடைகளில் புது போன் வெளியாகும் அன்று எனக்குப் பதிலாக ஐபாட் ரோபோவை வைத்துவிடுவேன். ஐபாட் திரையில் எப்பொழுதும் என் முகம் தெரிந்துகொண்டே இருக்கும். யாராவது கேள்விகள் கேட்டால் எனக்குத் தெரியவரும். எங்கிருந்தாலும் நான் பதில் அளித்துவிடுவேன். ஐபோன் 6எஸ் கடந்த வாரம் வெளிவந்தபோது லூசி ரோபோ வரிசையில் நின்று எனக்கு போனை வாங்கிக் கொடுத்துவிட்டது. நான்காவது ஆளாக எனக்கு போன் கிடைத்தது. ரோபோவாக இருந்தாலும் யாரும் பொறாமை கொள்ளவில்லை, வரிசையைத் தாண்டிச் செல்லவில்லை. ஒரு இயந்திரம் போல அதை நடத்தாமல், மிக அன்பாகப் பார்த்துக்கொண்டனர்’’ என்கிறார் லூசி கெல்லி.

ரோபோக்களுக்கு அடிமையாகிவிடுவானோ மனிதன்…

பிரான்ஸைச் சேர்ந்த சாகசக்காரர்கள் டான்க்ரேட் மெலெட், ஜூலியன் மில்லட். இரண்டு வெப்பக் காற்றுப் பலூன்களைப் பறக்கவிட்டு, அவற்றை இணைத்திருக்கும் கயிற்றின் மீது நடக்கும் சாகசத்தைச் செய்து முடித்திருக்கிறார்கள். ஓராண்டு காலமாக இந்த சாகசத்துக்காகப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். மோசமான வானிலை காரணமாக, இந்தச் சாதனை அத்தனை எளிதாக அமைந்துவிடவில்லை. அளவுக்கு அதிகமான காற்றால், கயிற்றில் இருந்து தவறினார். கைகளால் கயிற்றைப் பிடித்துக்கொண்டு பத்திரமாகத் தரைக்கு வந்தார். ஜூலியன் நடக்க முயற்சி செய்தபோது காற்று இன்னும் வலிமையாக வீசியதால், முழுமையாக நடந்து முடிக்க போதுமான நேரம் கிடைக்கவில்லை. ஆனாலும் இரண்டு வெப்பக் காற்றுப் பலூன்களுக்கு இடையே நடக்கும் முயற்சியே பாராட்டத்தக்கது என்கிறார்கள்.

பயமறியாதவர்கள்!

இங்கிலாந்தின் மிகச் சிறிய பாடிபில்டர் சூ டான். 4 அடி 10 அங்குலம் உயரம் கொண்ட 21 வயது சூ டான், இன்று பிரிட்டனின் முக்கியமான பாடிபில்டராக வலம் வருகிறார். ‘’மரபணுக் குறைபாடால் என் எலும்புகள் வளர்ச்சியடையவில்லை. என் உயரத்தைப் பார்த்துக் கிண்டல் செய்யாதவர்களே கிடையாது. மிகவும் வருத்தமாக இருந்தது. இன்று கிண்டல் செய்பவர்களை ஒருநாள் ஆச்சரியப்பட வைக்க வேண்டும் என்று தோன்றியது. உடற்பயிற்சி மூலம் என் உயரத்தை அதிகரிக்க முடியாது. ஆனால் என் உடலை பாடிபில்டராக மாற்ற முடியும்.

உணவுப் பழக்கத்தை மாற்றினேன். வாரத்துக்கு 5 நாட்கள் உடற்பயிற்சி செய்தேன். இந்தப் பயிற்சி என் உடலை மட்டுமல்ல, என் உள்ளத்தையும் பக்குவப்படுத்தியது. என் உயரம் குறித்து எனக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை அகன்றது. பிறரின் கிண்டலைக் கண்டு கலங்காமல் இருக்க முடிந்தது. இங்கிலாந்தின் பாடிபில்டிங் ஃபெடரேஷன் பல போட்டிகளில் என்னைப் பங்கேற்க வைக்கிறது. இன்று என் உயரம் ஒரு குறையாக யாருக்கும் தெரியவில்லை’’ என்கிறார் சூ டான்.

தன்னம்பிக்கையில் உயர்ந்து நிற்கும் சூ டானுக்கு வாழ்த்துகள்!

சீனாவின் ஹிஃபெய் ரயில் நிலையத்தில் வாய் வார்த்தைகளில் சண்டை போட்டுக்கொண்டிருந்த இளம் ஜோடி ஒன்று, திடீரென்று கைகலப்பில் இறங்கியது. அருகில் இருந்த காவலர்கள் இருவரையும் அழைத்து விசாரித்தனர். சில வாரங்களுக்கு முன் திருமணம் ஆனவர்கள். ஒரு திருவிழாவுக்கு முதல் முறை வெளியூர் பயணம் மேற்கொள்வதற்காக வந்திருக்கிறார்கள். கணவரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தி விட்டு வருவதற்குள் ரயில் கிளம்பிவிட்டது.

கணவர் ஏற்கெனவே அந்த ரயிலுக்கு டிக்கெட் எடுத்துவிட்டார். ஏமாற்றம் அடைந்த மனைவி ரயிலைத் தவற விட்டதற்காகவும், டிக்கெட் வீணாகிவிட்டதற்காகவும் சண்டையிட ஆரம்பித்து, அடிதடியில் முடிந்தது. தம்பதியர் இருவரையும் சமாதானம் செய்த காவல்துறை, மருத்துவரை அழைத்து சிகிச்சை அளித்தது. பிறகு அடுத்த ரயிலில் இலவசமாக ஏற்றி அனுப்பி வைத்தது.

அட! ஒரு ஜோடியை சேர்த்து வைத்திருக்கிறதே காவல்துறை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 min ago

தமிழகம்

38 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்