இந்தோனேசியாவில் கரோனா பாதிப்பு 37,420 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

இந்தோனேசியாவில் இன்று மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “இந்தோனேசியாவில் இன்று (சனிக்கிழமை) மட்டும் சுமார் 1,014 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 37,420 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 43 பேர் ஒரே நாளில் பலியாக, பலி எண்ணிக்கை 2,000-ஐக் கடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் தொழில் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உள்நாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் நெருக்கடிக்கு உள்ளாகினர். இந்நிலையில் அவசரத் தேவைகளைக் கணக்கில்கொண்டு போக்குவரத்துக்கு விதித்திருந்த தடையை இந்தோனேசிய அரசு கடந்த மாதம் தளர்த்தியது. மேலும், அங்கு விமானச் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால், பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் கரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக சில நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

54 mins ago

ஜோதிடம்

57 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்