சீனாவில் புதிதாக 11 பேருக்கு கரோனா பாதிப்பு: இதில் 7 பேருக்கு அறிகுறி இல்லாமல் தொற்று

By செய்திப்பிரிவு

சீனாவில் புதிதாக11 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன அதிகாரிகள் தரப்பில், “ சீனாவிவ் புதிதாக 11 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் பெய்ஜிங்கை சேர்ந்தவர்கள். மேலும், தொற்று பாதித்தவர்களில் 7 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சுமார் 56 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கரோனா பரவலை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு பெய்ஜிங்கில் மூன்று வாரங்களுக்கு பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இதுவரை 83,064 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 78, 365 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 4ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் பலியாகினர்.

உலகளவில் கரோனா வைரஸ் பரவியதற்கு கவனக்குறைவாகச் செயல்பட்ட சீனாதான் காரணம் என்று அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும் கரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் சீனாவிடம் வெளிப்படைத் தன்மை இல்லை என்ற விமர்சனத்துக்கு சீனா உள்ளாகி உள்ளது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை எல்லாம் சீனா முற்றிலுமாக மறுத்துள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 mins ago

வாழ்வியல்

11 mins ago

ஜோதிடம்

37 mins ago

க்ரைம்

27 mins ago

இந்தியா

41 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்