ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணம்: போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட மியாமி போலீஸார்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் போலீஸாரின் வன்முறைக்கு ஜார்ஜ் ஃபிளாய்ட் பலியானதைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது.

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலானது. இந்நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணம் அடைந்த செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்துக்கு மன்னிப்பு கோரி மியாமி போலீஸார் போராட்டக்காரர்கள் முன் மண்டியிட்டனர். மேலும் போராட்டக்காரர்களைக் கட்டித் தழுவியும் ஆறுதல் கூறினர்.

ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்துக்குக் காரணமாக இருந்த மினியாபோலீஸ் அதிகாரியின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மியாமி போலீஸாருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

க்ரைம்

12 mins ago

விளையாட்டு

41 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்