அமெரிக்காவில் தொடரும் போராட்டம்; நாடு வலியில் இருக்கிறது: ஜோ பிடன்

By செய்திப்பிரிவு

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்காவில் நடக்கும் கலவரங்களுக்கு அதிபர் ட்ரம்ப்பை விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலாக, ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது.

மினியாபோலீஸில் தொடங்கிய ஆர்ப்பாட்டம், நியூயார்க், துல்சா, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களிலும் பரவி பல போலீஸ் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் கலவரம் தொடர்கிறது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்க எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சித் தலைவர்கள் போராட்டக்காரர்களைச் சந்தித்து உரையாடலை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ட்ரம்ப்பை விமர்சித்துள்ளார். மேலும் வில்மிங்டனில் கறுப்பினக் குடும்பத்தினரிடம் உரையாடினார்.

இதுகுறித்து ஜோ பிடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது தேசம் தற்போது வலியில் இருக்கிறது. ஆனால், இந்த வலி நம்மை அழிக்க நாம் அனுமதிக்கக் கூடாது.

அதிபர் வேட்பாளராக நான் இந்த உரையாடலை முன்னெடுக்க உதவ வேண்டும். அதை விட முக்கியமானது நான் கவனிக்க வேண்டும். கேட்க வேண்டும். இன்று இரவு வில்மிங்டனில் செய்ததுபோல” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

59 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்