சிரியாவில் பாரம்பரிய சின்னமாக திகழ்ந்த கோயிலை தகர்த்தது ஐ.எஸ்

By ஐஏஎன்எஸ்

யுனெஸ்கோ பாரம்பரிய சிரிய நகரத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பால் சாமின் கோயிலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தகர்த்தனர்.

சிரியாவில் உள்ள பல்மைராவின் பாரம்பரிய மையமாக திகழ்ந்த பால் சாமின் கோயிலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து கடந்த மாதம் தகர்த்ததாக லண்டனை மையமாக கொண்ட மனித உரிமை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

பழங்காலத்து கற்களால் பிரம்மாண்டமான கோயிலை தகர்ப்பதும் மிகவும் கடினம் என்பதால் பெருமளவில் வெடிப்பொருட்களில் கோயிலின் மையப்பகுதியில் நிரப்பி, அதனை ஐ.எஸ். இயக்கத்தினர் வெடிக்கச் செய்ததாகவும் அந்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பல்மைரா நகரத்தை கடந்த மே மாதமே ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றினர்.

சிரியா மற்றும் இராக்கின் பல நகரங்களை கைக்குள் வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பல்மைரா நகரத்தை சிதைக்கக் கூடிய வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று சிரியாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முன்னதாக அச்சம் தெரிவித்திருந்தனர். இவர்கள் ஏற்கெனவே மொசூல் நகரை தங்களது வசத்தில் வைத்துக் கொண்டு அங்கிருந்த 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மெசபடோமிய கால பாரம்பரியச் சின்னங்களை அழித்து அதன் வீடியோ காட்சிகளை வெளியிட்டனர்.

பல்மைரா நகர கோயில் கி.மு. 17ல் ரோம் நாட்டை ஆண்ட ஹட்டியன் மன்னர்களால் கட்டப்பட்டது. இந்த இடம் பாலைவன முத்து என்று அழைக்கப்பட்டு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

34 mins ago

சினிமா

51 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

54 mins ago

சினிமா

1 hour ago

வணிகம்

42 mins ago

இந்தியா

54 mins ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

சினிமா

55 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்