தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் கரோனா இருக்கும்: அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்ட பிறகும் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

இந்த நிலையில் கரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த பின்னரும் ஹெச்ஐவி, அம்மை போன்று கரோனா வைரஸும் தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை நான்கு வைரஸ்கள் சளியைப் பரப்பி வருகின்றன. அந்த வகையில் தற்போது பரவி வரும் கரோனா வைரஸ் ஐந்தாவது வைரஸாக மாறக் கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சிகாகோ பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் சாரா கூறும்போது, “இந்த வைரஸ் இங்குதான் இருக்கப் போகிறது. நாம் அந்த வைரஸுடன் எவ்வாறு பாதுகாப்பாக வாழப் போகிறோம் என்பதுதான் நம் முன் இருக்கும் கேள்வி. இது குறைந்த காலகட்டத்தில் முடியக் கூடியது அல்ல” என்றார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 58,07,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,10,388 பேர் குணமடைந்தனர். 3,57,807 பேர் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்