தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை

By பிடிஐ

தங்கள் நாட்டுக்கு எதிரான திட்டங்களை போட்டு வரும் ஹக்கானி உள்ளிட்ட உள்நாட்டு தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் அமைதியையும், அரசியல் ஸ்திரத்தன்மையையும் வலுப்படுத்த வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல்களுக்கு ஹக்கானி தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதனால் அவர்களை உள்ளடக்கிய தீவிரவாத இயக்கங்களை முற்றிலுமாக ஒடுக்க வேண்டும்" என்றார்.

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் பாகிஸ்தானில் ஒரு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது அவர் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப் ஆகியோரைச் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்