கத்தாரில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்

By செய்திப்பிரிவு

கத்தாரில் கடந்த ஒரு மணிநேரத்தில் 1,547 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கத்தார் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “கத்தாரில் கடந்த 24 மணிநேரத்தில் 1,547 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கத்தாரில் கரோனா தொற்று எண்ணிக்கை 30,972 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 16 பேர் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கத்தாரைப் பொறுத்தவரை அங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குத்தான் அதிகமாக தொற்று ஏற்பட்டிருப்பதாக அங்கு செயல்படும் மனிதவள அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் பொருளாதாரத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் கத்தார் அரசு முயன்று வருகிறது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் 41,02,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3,08,655 பேர் பலியாகியுள்ளனர். 17,59,704 பேர் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

4 hours ago

இலக்கியம்

4 hours ago

இலக்கியம்

4 hours ago

இலக்கியம்

4 hours ago

தமிழகம்

5 mins ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

வணிகம்

32 mins ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்