நடப்பு ஆண்டில் உலகப் பொருளாதாரம் 3.2% சரியும்: ஐ.நா. கணிப்பு

By செய்திப்பிரிவு

உலகப் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 3.2% என்ற அளவில் சரியும் என்று என்று ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. சபை இன்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஜனவரி மாதத்தில், அதாவது கரோனா பரவல் தீவிரமடைந்ததற்கு முன்பாக, வெளியிட்ட கணிப்பில் நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பொருளாதாரம் 3.2 சதவீதம் சரியும். அதேசமயம் கரோனா பரவல் தொடர்ந்து நீடித்து உலக நாடுகளின் ஊரடங்கு மூன்றாம் காலாண்டுக்கும் நீடிக்குமானால் நடப்பு ஆண்டில் பொருளாதாரச் சரிவு 4.9 சதவீதத்தைத் தொடும்.

இதன் காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகப் பொருளாதாரம் 8.5 டிரில்லியன் டாலர் இழப்பைச் சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 1930-ம் ஆண்டில் ஏற்பட்ட பேரழுத்தக் காலகட்டத்துக்குப் பிறகு உலகம் சந்திக்கும் மிகப் பெரிய பொருளாதாரச் சரிவு இது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்து மார்ச் மாதம் உலக நாடுகள் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்தின. அதைத் தொடர்ந்து தொழில் நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. இதனால் இரண்டாம் காலாண்டில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

சுற்றுலா

25 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்