கரோனா தாக்கம்: 6 லட்சம் ஆஸ்திரேலியர்கள் வேலை இழப்பு

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

இதுகுறித்து சினுவா செய்தி நிறுவனம், “ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்ரல் மாதம் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மார்ச் - ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட வேலை இழப்பு கடந்த ஆண்டு ஏற்பட்ட வேலை இழப்பைவிட அதிகமாகும். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் வேலையிழப்பு 6.2 % ஆக அதிகரித்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் மூன்று நிலைகளாக ஊரடங்கு தளர்த்தப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்திருந்தார். மேலும், வேலைவாய்ப்பு மீட்டெடுக்கப்படும் என்றும் அவர் மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

2.5 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவில் 6,989 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 98 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசிய நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 44,29,969 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,98,180 பேர் பலியாகியுள்ளனர். 16,59,873 பேர் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்