ஹாங்காங்கில் மூன்று வாரங்களுக்குப் பிறகு மீண்டும் கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

ஹாங்காங்கில் மூன்று வாரங்களுக்குப் பிறகு மீண்டும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் கரோனா தொற்று பெருமளவு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டது. மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மூன்று வாரங்களுக்குப் பிறகு ஹாங்காங்கில் இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர் சவுங் கூறும்போது, ”66 வயதான பெண்மணிக்கும் அவரது பேத்திக்கும் கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு கரோனா தொற்று எவ்வாறு பரவியது என்பதை ஆராய்ந்து வருகிறோம். அவர்கள் குடும்பத்தினர் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. கரோனா நோயாளிகளுடனும் அவர்களுக்குத் தொடர்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் கடந்த மூன்று வாரங்களில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது உள்ளூரில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மதுபான விடுதிகள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்களில் ஹாங்காங் அரசு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஹாங்காங்கில் கரோனா வைரஸ் தொற்றால் 1,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 991 பேர் குணமடைந்தனர். 4 பேர் பலியாயினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்