ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை: பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியர்களை அங்கிருந்து அழைத்து வரும் நடவடிக்கைகள் இன்று தொடங்கியது.

கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் காரணமாக பல்வேறு நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடியதால் பல நாடுகளில் பணிச்சூழல் காரணமாக தங்கி இருக்கும் இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். இந்திய அரசும் கடம்த மாதம் 25-ம் தேதி முதல் அனைத்துப் பயணிகள் விமானப் போக்குவரத்துக்கும் தடை விதித்தது.

இதன் காரணாக வளைகுடா நாடுகளில் பணிக்காகச் சென்றிருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் தாயகம் செல்ல விரும்பியும் முடியவில்லை. இதனால் இந்தியர்கள் தாயகம் செல்ல முடியாமலும், குடும்பத்தினரைக் காண முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இதையடுத்து, முதல் கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப விரும்பினால் அவர்களுக்காக ஆன்லைன் பதிவேட்டை இந்திய அரசு தொடங்கியது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் ஏராளமானோர் தங்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்தனர். இவர்கள் 7-ம் தேதி முதல் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியர்களை அங்கிருந்து அழைத்து வரும் நடவடிக்கைகள் இன்று தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 34 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள்.

இவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தி, தேவையான மருத்துவ வசதிகள் செய்து பின்னர் விமான நிலையத்தில் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் அழைத்து வரப்படவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் பவன் கபூர் மேற்கொண்டு வருகிறார்.

பவன் கபூர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்