மர்மம் உடைந்தது: 20 நாட்களுக்குப்பின் முதல்முறையாக பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றார் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்

By பிடிஐ

கடந்த 20 நாட்களாக வெளிஉலகின் கண்களில் படாமல் இருந்த வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல்வேறுவிதமான வதந்திகளும், ஊகச் செய்திகளும் நாள்தோறும் வந்த நிலையில் முதல்முறையாக நேற்று பொது நிகழ்ச்சியில் அதிபர் கிம் ஜாங் பங்கேற்றார்

வட கொரியா அதிபர் கிம் ஜாங் கடந்த 20 நாட்களாக வெளிஉலகிற்கு தனது முகம் காட்டாமல் இருந்து வந்தார் வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தின கொண்டாட்டத்தில்கூட அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. கடந்த 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. கடந்த 2011-ம்ஆண்டு அதிபராக வந்தபின் முதல்முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் தவிர்த்தார்.

இந்த சூழலில் சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை நடந்தது அதன் பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் சேனல் செய்தி வெளியிட்டது. மேலும் அமெரிக்க உளவுத்துறையும் இதை தீவிரமாகக் கண்காணித்து வருகிறதாகவும் செய்திகள் வெளியாகின. இதுபற்றி பேட்டி அளித்த அதிபர் ட்ரம்ப், “ அதிபர் கிம் உடல்நலம் தேற வாழ்த்துக்கள். அதிபர் கிம் உடல்நிலை தொடர்பான செய்திகள் உண்மைக்கு மாறானவை “ என தெரிவித்திருந்தார்

40 வயதுக்குள் இருக்கும் அதிபர் கிம்முக்கு அதீதமான புகைப்பழக்கம், உடல் பருவமன், உடல்சோர்வு உற்சாகமின்மை, அதிக தூக்கம் ஆகியவற்றால் அவதிப்பட்டதால் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

வடகொரியாவைப் பொறுத்தவரை தீவிரமான கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் நாடு. அங்கு ஊடகங்களின் செய்திகூட அரசின் தணிக்கைக்குப்பின்புதான் வெளியாகும். இதனால்தான் அதிபர் கிம் உடல்நிலை குறித்த எந்ததகவலும் வெளிஉலகிற்கு தெரியாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டதால் அவர் உயிருடன் இருக்கிறார என்ற சந்தேகம் கூட வலுத்தது. ஏனென்றால் கிம் தாத்தா முதலாம் கிம் இறந்தபோது 2 நாட்களுக்குப் பின்புதான் வெளிஉலகிற்கே தெரியவந்தது

. இது குறித்து தென் கொரியா அரசிடம் ஊடகங்கள் சார்பில் கேட்டபோது வடகொரிய அதிபர் கிம்முக்கு உடல்நிலையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை, அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வழக்கமான பணிகளைச்செய்து வருகிறார் எனத் தெரிவித்தது. மேலும், அதிபர் கிம் கவலைக்கிடமாக இருக்கிறார் எனும் செய்தியை மறுத்தது

இந்த சூழலில் அடுத்த அதிபராக கிம் சகோதரி கிம் யோ ஜாங் வருவார் அதற்கான ஏற்பாடுகள் தயாராகின்றன என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த சூழலில் கடந்த 20 நாட்களாக நீடித்து வந்த மர்மம் அனைத்தையும் உடைத்து நேற்று பொது நிகழ்ச்சியில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார்

அதிபர் கிம் சகோதரி கிம் யோ ஜாங்

தலைநகர் யாங்யாங் அருகே சன்சியான் நகரில் அரசு சார்பில் கட்டப்பட்ட உரம் தயாரிக்கும் தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி அதிபர் கிம் ஜாங் உன் நேற்று தொடங்கி வைத்தார். உழைப்பாளர் தினமான நேற்று சன்சியானில் உள்ள பாஸ்பேட் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. இதற்கான புகைப்படங்களை வடகொரிய அரசின் கொரிய மத்திய செய்தி நிறுவனம்(கேசிஎன்ஏ) வெளியிட்டுள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் ரிப்பனை வெட்டியவுடன் அருகில் அனைவரும் கைகளைத்தட்டி மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்ததாகவும், அவருடன் அவரின் சகோதரி கிம் யோ ஜாங் உடன் இருந்தார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு இதுபோன்று கிம் குறித்த பல்வேறு வதந்திகள் வந்தன, ஆனால் 6 வாரங்களாக மக்கள் மத்தியில் வராத கிம் பின்னர் வந்தார். ஆனால், கடந்த 20 நாட்களாக கிம் எங்கே சென்றார், எங்கிருந்தார் என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்