பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கரோனா பரிசோதனை

By செய்திப்பிரிவு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானின் நிலைமை கரோனா தொற்று காரணமாக மேலும் மோசமடைந்துள்ளது. இந்த நிலையில் அரசின் நெருக்கடி நிலைக்கு உதவும் வகையில் அந்நாட்டில் இயங்கும் பல தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு நிதி அளித்து வருகின்றன.

அந்த வகையில் பாகிஸ்தானில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் தலைவரான பைசல் எதி, சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானைச் சந்தித்து நிதி வழங்கினார்.

இந்த நிலையில் பைசலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் பிரதமர் இம்ரான்கானைச் சந்தித்ததன் காரணமாக தற்போது இம்ரான்கானும் கரோனா பரிசோதனைக்கு உள்ளாகியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இம்ரான்கானின் பரிசோதனை முடிவு இதுவரை அறிவிக்கப்படவில்லை .

பாகிஸ்தானில் கரோனா தொற்றுக்கு இதுவரை 9,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 209 பேர் பலியாகியுள்ளனர். 2,156 பேர் குணமடைந்துள்ளனர்.

25,57,504 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6,94,881 பேர் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

இந்தியா

26 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்