வரலாற்றில் முதல் முறை- சீனா மீது அமெரிக்காவின் மிசவ்ரி மாகாணம் வழக்கு- மக்களை ஏமாற்றியதாகக் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை அமெரிக்காவில் 42,000த்தைக் கடந்து விட்ட நிலையில் அந்நாட்டின் மிசவ்ரி மாகாணம் சீனாதான் கரோனாவுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளது.

கரோனா தகவலை மறைத்தது, வெளிப்படுத்துபவர்க்ளையும் தண்டிப்பது என்று கரோனா பரவலைத் தடுக்க சீன அரசு ஒன்றுமே செய்யவில்லை என்பதால் வழக்கு என்று மிசவ்ரி அட்டர்னி ஜெனரல் எரிக் ஷ்மிட் தெரிவித்துள்ளார்.

மிசவ்ரியில் 6,105 பேர் கரோனாவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர், 229 பேர் பலியாகியுள்ளனர்.

இது போன்ற முதல் வழக்கு தொடர்பாக, “சீன அரசு மக்களை ஏமாற்றிவிட்டது. முக்கியத் தகவலை மறைத்து தகவலை வெளிப்படுத்துவோரையும் கைது செய்து மனிதனிலிருந்து மனிதனுக்குத் தொற்றும் என்ற தகவலை வெளியிடாமல் மறுத்து முக்கியமான மருத்துவ ஆய்வை சீரழித்து பல லட்சம்பேர்களை வைரஸில் சிக்க வைத்துள்ளது. கவச உடைகளை, கருவிகளையும் பதுக்கியது. இதனால் தடுக்கக் கூடிய ஒன்றை பெரிதாக்கி விட்டுள்லனர்” என்று சீனா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சட்டம் பெரும் போராட்டமாகும் ஏனெனில் சீனாவுக்கு இறையாண்மை பாதுகாப்பு உள்ளது என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

சீனாவின் வூஹானில் ஜனவரி மத்தியில் 40,000 பேருக்கு இரவு விருந்து அளித்தது இதனால் வைரஸ் பரவல் தீவிரமடைந்ததாக மிசவ்ரி அட்டர்னி ஜெனரல் குற்றம்சாட்டுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

7 mins ago

இந்தியா

12 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

20 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

26 mins ago

ஆன்மிகம்

36 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

மேலும்