நியூயார்க்கில் கரோனா இறப்பு குறைகிறது

By செய்திப்பிரிவு

நியூயார்க்கில் கரோனா இறப்பு விகிதம் முந்தைய வாரங்களை ஒப்பிடுகையில் சற்று குறைந்துள்ளது. இது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய முன்னேற்றம் என்று நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ”கடந்து மூன்று நாட்களில் கரோனா பாதிப்பு விகிதம் முந்தைய நாட்களில் இருந்ததை விடக் குறைந்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

கிட்டத்தட்ட நியூயார்க்கில் 18,000 பேர் கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததனர். அந்த எண்ணிக்கை தற்போது 16,000 ஆகக் குறைந்துள்ளது. இறப்பு விகிதமும் 550க்குக் கீழ் குறைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

இருந்தபோதிலும் இன்னும் முழுமையாக கரோனா தாக்குதலிருந்து வெளிவரவில்லை என்பதையும் ஆண்ட்ரூ கியூமோ கூறினார்.

ஏப்ரல் 17-ல் நியூயார்க்கில் 540 பேர் கரோனாவால் இறந்தனர். இது முந்தைய வாரங்களில் இருந்ததை விடக் குறைந்த அளவு ஆகும்.

அமெரிக்காவில் நியூயார்க்கில்தான் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நியூயார்க்கில் 2,36,732 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் அங்கு 17,671 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் 7,40,746 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 39,158 பேர் இறந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்புதான் நியூயார்க் ஆளுநர், மக்கள் பொது இடங்களுக்கு வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்