கரோனாவுக்கு ஐரோப்பாவில் உயிரிழப்பு ஒரு லட்சத்தைக் கடந்தது: இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டனில் பெரும்பாலான உயிரிழப்பு

By பிடிஐ

கரோனா வைரஸின் கொடூரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் உயிரிழப்பு ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக உலகளவில் நேர்ந்த உயிர்பலிகளில் மூன்றில் இரு பங்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை ஒரு லட்சதத்து 501 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன, 11 லட்சத்து 36 ஆயிரத்து 672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 1.57 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதில் இரு பங்கு அமெரிக்காவில் நடந்துள்ளது.

ஐரோப்பாவில் முதன்முதலில் பெருத்த சேதத்ைத ஏற்படுத்தியது இத்தாலியில்தான். அங்கு இதுவரை கரோனா வைரஸுக்கு 23 ஆயிரத்து 227 பேர் பலியாகியுள்ளனர்.1.75 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக இத்தாலியில் உயிரிழப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகிறது, 45 ஆயிரம் பேர் வரை இதுவரை குணமடைந்து ெசன்றுள்ளனர்

பிரான்ஸில் இதுவரை கரோனா வைரஸுக்கு 19 ஆயிரத்து 323 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 642 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாட்களோடு ஒப்பிடுகையில் பிரான்ஸிலும் உயிரிழப்புகள் குறைந்து வருகின்றன. தொடர்ந்து 4-வது நாளாக பிரான்ஸில் உயிரிழப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதுவரை கரோனா வைரஸால் பிரான்ஸில் 1.51 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 36 ஆயிரம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரிழப்புகளில் 20 ஆயிரத்தைக்கடந்துள்ள 2-வது நாடு ஸ்பெயினாகும். இதற்கு முன் இத்தாலியில் மட்டும் 20 ஆயிரத்துக்கு மேல் உயிரிழப்புகள் நடந்திருந்தன, இப்போது ஸ்பெயினில் 20 ஆயிரத்தை உயிரிழப்பு கடந்த நிலையில் அடுத்த சில நாட்களில் பிரி்ட்டனிலும் 20 ஆயிரத்தைக் கடந்துவிடும்

அதேபோல கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 2 லட்சத்தை நெருங்குகிறது. இதுவரை அங்கு 1.94 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 ஆயிரம் பேர் வரை குணமடைந்துள்ளனர்

பிரிட்டனைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து 1.14 லட்சமாக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 464 ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டனில் இன்னும் உயிரிழப்பின் வேகம் குறையவில்லை, நேற்றுகூட அங்கு 888 பேர் உயிரிழந்தார்கள்.
ஜெர்மனியில் இதுவரை கரோனாவுக்கு 1.43 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் ஜெர்மனியில் உயிரிழப்பு குறைவுதான். இங்கு கரோனாவுக்கு இதுவரை 4,538 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 85,400 பேர் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்