கரோனா பாதிப்பில் ஒரு லட்சத்தை நெருங்கும் பிரிட்டன்: 12 ஆயிரத்தை எட்டியது உயிரிழப்பு

By ஐஏஎன்எஸ்

ஐரோப்பிய நாடுகளை கலங்கடித்து வரும் கரோனா வைரஸுக்கு பிரி்ட்டனும் தப்பவில்லை, அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டியது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது.

பிரிட்டனில் நேற்று புதிதாக 5,532 பேர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93 ஆயிரத்து 873 ஆக அதிகரித்துள்ளது. அடுத்துவரும் நாட்களில் ஒரு லட்சத்தை பிரி்ட்டன் எட்டிவிடும்.

அங்கு நேற்று ஒரே நாளில் 778 ேபர் உயிரிழந்தனர், இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 107ஆக அதிகரித்துள்ளது என்று பிரி்ட்டன் சுகாதார மற்றும் சமூக நலத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை அங்கு 3.82 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் ெசய்து முடிக்கப்பட்டுள்ளன, திங்கள்கிழமை மட்டும் 15 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது

பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனாக் நிருபர்களிடம் கூறுகையில், “ இது மிகவும் கடினமாக காலகட்டம், இன்னும் அதிகமாக வர இருக்கிறது. மக்கள் சமூக விலகலகைக் கடைபிடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதைப் பின்பற்றினால்தான் நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். மக்கள் நலன் முக்கியமாக, அல்லது பொருளாதார நலன் முக்கியமாக இதில் எதைத் தேர்வு செய்வது என்பது பிரிட்டனின் நோக்கமல்ல. எங்களைப் பொருத்தவரை மக்களின் நலனும் முக்கியம், பொருளாதார நலனும் முக்கியம்” எனத் தெரிவித்தார்

பிரிட்டனின் பட்ஜெட் பொறுப்புக்குழு விடுத்த எச்சரிக்கையில் பிரி்ட்டன் பொருளாதாரம் 35 சதவீதம் 2-வது காலாண்டில் சுருங்கக்கூடும், வேலையின்மை அதிகரிக்கும், 20 லட்சம் பேர் வேலையின்மையால் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

39 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்