தென் ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

தற்போதைய நிலவரப்படி தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2,173 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் கரோனா தொற்று எண்ணிக்கை 2,173 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென் ஆப்பிரிக்காவில் இதுவரை 80,085 கரோனா வைரஸ் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், பொது ஆய்வகங்களில் நடத்தும் சோதனைகளை அதிகரிக்க இருப்பதாகவும் தென் ஆப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 18 லட்சத்து 53 ஆயிரத்து 505 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 14 ஆயிரத்து 257 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்