சீனாவில் மீண்டும் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது; வூஹானுக்கு மட்டும் நோ

By பிடிஐ

கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் சீனாவில் மீண்டும் உள்நாட்டு விமான சேவை தொடங்கியுள்ளது. எனினும் வூஹான் நகரத்துக்கு மட்டும் இயக்கப்படவில்லை.

சீனாவின் ஹுபெய் மாகாணம், வூஹானில் கடந்த ஆண்டு டிசம்பரில் கரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாகாணத்தில் 81,394 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. 3,295 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த ஜனவரி மாதத்தில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வூஹான் நகரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், வூஹான் நகருக்குப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையே சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்குக் கரோனா பரவியது. இதனால் பெரும்பாலான நாடுகள் முழுமையாக லாக்-டவுன் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே தொடர் நடவடிக்கைகளால் சீனாவில் கடந்த 19-ம் தேதியில் இருந்து புதிய உள்நாட்டுத் தொற்று எதுவும் ஏற்படவில்லை.

இதனால் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் பயணத்துக்கான கட்டுப்பாடுகள் கடந்த 25-ம் தேதியில் இருந்து தளர்த்தப்பட்டன. இந்நிலையில் நேற்றில் (ஞாயிற்றுக்கிழமை) இருந்து ஹுபெய் மாகாணம் உட்பட அனைத்து மாகாணங்களிலும் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கின. எனினும் வூஹான் நகரத்துக்கு மட்டும் விமான சேவை இயக்கப்படவில்லை.

கரோனா தொற்றின் பிறப்பிடமான வூஹான் நகரத்தில் ஏப்ரல் 8-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்