சீன அதிபர் ஜின்பிங்கை ‘கோமாளி’ என்று கிண்டல் செய்த நபர் மாயம் : நண்பர்கள் கவலை

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்று தொடங்கிய சீனாவில் அதனை அதிபர் ஜின்பிங் கையாண்ட விதம் சரியில்லை, அவர் ஒரு கோமாளி என்று விமர்சனம் செய்த ரென் ஜிக்கியாங் என்ற நபர் திடீரென மாயமாகியுள்ளார் என்றும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது நண்பர்கள் கவலையடைந்துள்ளனர்.

ரென் ஜிக்கியாங் இத்தனைக்கும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆவார், இவர் மார்ச் 12ம் தேதி முதல் மாயமாகிவிட்டதாகவும் இவரை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

ரென் ஜிக்கியாங் சீனாவில் பிரபலமானவர். இவர் மாயமானது பலருக்கும் தெரிந்திருக்கிறது என்கிறார் இவர் நண்பர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ரென் ஜிக்கியாங்கை தொடர்பு கொள்ள முயற்சித்த போது பதில் எதையும் பெற முடியாமலேயே போனது. அதிபர் ஜின்பிங் மேற்கொண்ட ஓர் உரையைச் சுட்டிக்காட்டி ரென் ஜிக்கியாங் தனது கருத்தை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்த போது ஜின்பிங் பெயரைக் குறிப்பிடாமல், “மகாராஜா ஒருவர் தன் புதிய ஆடைகளைக் காட்சிப் படுத்த நிற்பது போல் தெரியவில்லை மாறாக ஆடைகளை களைந்து நிற்க வைக்கப்பட்ட ஒரு கோமாளியாகக் காட்சியளிக்கிறார்” என்று பதிவிட்டிருந்தார்.

கரோனா வைரஸ் குறித்த தகவல்களை வெளியே கசியாமல் சீனா தடுத்து வருகிறது என்றும் ஊடகச் சுதந்திரம் இல்லை என்றும் மேற்கத்திய பத்திரிகைகள் அதிபர் ஜின்பிங்கை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

37 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

54 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்