அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்த அதிகாரிக்கு கோவிட்-19 காய்ச்சல்

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சில நாட்களுக்கு முன்பு சந்தித்த பிரேசில் அதிகாரிக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்றியுள்ளது. இதனால் அமெ ரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

பிரேசில் அதிபர் ஜேர்போல் சோனரோ கடந்த 7-ம் தேதி அமெ ரிக்கா சென்றார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பால்ம் பீச் நகரில் அதிபர் டொனால்டு ட்ரம்பை அவர் சந்தித்துப் பேசினார். பிரேசில் அதிபருடன் அவரது தகவல் தொடர்பு செயலாளர் பாபியோ வாஜ்கார்டனும் அமெ ரிக்கா சென்றிருந்தார்.

பிரேசில் திரும்பிய பாபியோ வுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்தபோது அவருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்க பயணத்தின்போது பாபியோ வாஜ்கார்டன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸை சந்தித்துப் பேசினார். அவர்களோடு இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். பாபியோவுக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதால் அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

பிரேசில் அதிபர் ஜேர் போல் சோனரோவுக்கும் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாகவும் அவரது ரத்த மாதிரி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட் டுள்ளதாகவும் தகவல்கள் வெளி யாகி உள்ளன.

கனடா பிரதமரின் மனைவி

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வின் மனைவி சோபிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது ரத்த மாதிரி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வுக்கு இதுவரை காய்ச்சல் அறிகுறி கள் இல்லை. எனினும் முன்னெச் சரிக்கையாக அவரும் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவக் கண் காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலகத்துக்கு ஜஸ்டின் செல்ல மாட்டார் என்றும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவார் என் றும் கனடா அரசு அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்