போலந்து, சிலி, அர்ஜெண்டினா நாடுகளில் முதல் கரோனா வைரஸ் பாதிப்பு

By செய்திப்பிரிவு

அர்ஜெண்டினா, சிலி, போலந்து ஆகிய நாடுகளில் முதல் கோவிட் - 19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ஜெர்மனியிலிருந்து போலந்து வந்த நபருக்கு கோவிட் - 19 (கரோனா வைரஸ் ) காய்ச்சல் உறுதிச் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்” கூறப்பட்டுள்ளது.

மேலும் தென் அமெரிக்க நாடுகளான சிலி மற்றும் அர்ஜெண்டினாவிலும் முதல் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிச் செய்யபட்டதாக அந்நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.

உலக முழுவதும் கரோனா வைரஸுக்கு சுமார் 90,870 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது.

இத்தாலியில் கோவிட் 19 ( கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 77 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக 4,000க்கும் அதிகமான கரோனா நோயாளிகள் தென் கொரியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்