கரோனா வைரஸ் அச்சுறுத்தும் நிலையில் சீனாவில் நாய்க்கறி விருந்து: கடும் எதிர்ப்பு

By பா.பிரகாஷ்

உலகையே உலுக்கி வரும் கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2,744 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹூபேயில் மட்டும் புதனன்று 52 பேர் மரணமடைந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் புதிதாக 433 பேருக்கு கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை சீனாவில் 78,487 பேருக்கு கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் பாதிப்பு உள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து இதுவரை 29,745 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வூஹான் நகரில் வசித்து வந்த 650 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலமாக மத்திய அரசு அண்மையில் மீட்டது.

கரோனா வைரஸ் பரவுவதற்க்கு சீனர்களின் உணவுப் பழக்கங்களே காரணம் என்ற விமர்சனம் உலகமெங்கும் எழுந்துவந்த நிலையில், அது குறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. ஆனால் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனர்களின் உணவுப் பழக்கங்களே காரணம் என்பது ஆதாரபூர்வமாக இதுவரை நிருபிக்கப்படவில்லை.

இந்நிலையில் சீனாவின் குவாங்ஸி என்ற மாகாணத்தில் யூலின் நகரில் 'யூலின் நாய்க்கறி விருந்து' நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. அதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த விருந்து ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்று மட்டும் சுமார் 10 ஆயிரம் நாய்கள் கொல்லப்பட்டு உணவாக உட்கொள்ளப்பட்டன. கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் இந்த நேரத்தில் இத்திருவிழாவிற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

விளையாட்டு

5 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்