கரோனா வைரஸ் பாதிப்பு: மெக்கா மதினாவுக்குச் செல்ல பயணிகளுக்குத் தடை; சவுதி

By செய்திப்பிரிவு

மத்தியக் கிழக்கு நாடுகளில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மதினாவுக்குப் பயணிகள் செல்ல சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.

ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் கோவிட் -19 (கரோனா வைரஸ் ) பாதிப்பின் தீவிரம் அதிகமாகியுள்ளது. சுமார் 22 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 141 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பயணிகள் மூலம் கோவிட் -19 காய்ச்சல் பரவுவதைத் தவிர்க்க சவுதி நிர்வாகம், இஸ்லாமியர்களின் புனிதத் தலாமன மெக்கா மதினாவுக்கு பயணிகள் வருவதற்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து சவுதி தரப்பில், “இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து சர்வதேச நடவடிக்கைகளுக்கும் சவுதி அரேபியா ஆதரவு தெரிவிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவிட் - 19 கரோனா வைரஸ் பரவல் குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சவுதி தனது குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது. மெக்கா மதினாவுக்கான சவுதியின் தடை அங்கு செல்ல இருந்த லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்