கரோனா வைரஸ் தாக்கம் தணிந்திருந்தாலும் பலி எண்ணிக்கை சீனாவில் 2,715 ஆக அதிகரிப்பு: 29,745 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

By பிடிஐ

உலகையே உலுக்கி வரும் கரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் சற்றே தணிந்திருந்தாலும் பலி எண்ணிக்கை இதுவரை 2,715 ஆக அதிகரித்துள்ளது. ஹூபேயில் மட்டும் புதனன்று 52 பேர் மரணமடைந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

சீனா முழுதும் புதிதாகக் கரோனாவுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 406 ஆக உள்ளது. உறுதி செய்யப்பட்ட கரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 80,000த்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

தீவிர கரோனாவுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 374 குறைந்து 8,752 ஆக உள்ளது. இன்னும் 2,491 பேருக்கு கரோனா இருப்பதாக ஐயம் எழுந்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து இதுவரை 29,745 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஹாங்காங்கில் 85 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் மரணமடைந்துள்லனர். மக்காவில் 10 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், தய்வானில் ஒருவர் பலியாகியுள்ளார்.

கரோனா வைரஸ் மையமான ஹுபே மற்றும் வூஹானில் 50 மில்லியன்களுக்கும் கூடுதலான மக்கள் தொகை உள்ளது. ஜனவரி 23ம் தேதி முதல் இங்கு தெருக்கள் விரிச்சோடி காணப்படுகின்றன, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர கடும் கட்டுப்பாடுகள் நீடித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 mins ago

வாழ்வியல்

11 mins ago

ஜோதிடம்

37 mins ago

க்ரைம்

27 mins ago

இந்தியா

41 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்