ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துங்கள்: மியான்மர் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

By ஐஏஎன்எஸ்

மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சர்வதேச நீதிமன்றம் அந்நாட்டு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சூ கியி தொடர்ந்து மியான்மரின் செயல்பாடுகளை நியாயப்படுத்தி வரும் நிலையில் சர்வதேச நீதிமன்றம் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரோஹிங்கிய முஸ்லிம்களின் போராளிக்குழுவான அராகன் ரோஹிங்கிய சால்வேஷன் ஆர்மி நடத்திய தாக்குதலை அடுத்து மியான்மர் ராணுவத்தினர் ராகைன் மாகாணத்தில் நடத்திய கொலைவெறி இனப்படுகொலைத் தாக்குதல்களையே சர்வதேச நீதிமன்றம் தன் உத்தரவில் கண்டித்துள்ளது. ராணுவத்தின் அராஜகங்களினால் சுமார் 8 லட்சம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் அடுத்து உள்ள வங்கதேச நாட்டுக்கு அகதிகளாகச் சென்றனர்.

முதலில் ஹேகில் கடந்த டிசம்பரில் விசாரணை நடைபெற்றது, அதில் இனப்படுகொலை உடன்படிக்கை, 1948-ன் சட்டத்திட்டங்களுக்கு ஒப்புக் கொண்டு மியான்மர் 1956-ல் கையெழுத்திட்டது சுட்டிக்காட்டப்பட்டது.

ராணுவத்தினர் ரோஹிங்கியர்கள் மீது பிரயோகித்த தொடர் வன்முறைகளான சித்ரவதை, கொலை, சொத்து அழிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐநா நியமித்த உண்மை அறியும் குழுவை அங்கு வர மியான்மர் அனுமதிக்கவில்லை.

ஆயுதப்படையினரின் கிளர்ச்சிக்கு எதிர்வினையாற்றியதே தங்களது பங்கு என்று சூ கியி ஒதுங்கிக் கொண்டார்.

இந்நிலையில் சர்வதேச நீதிமன்றம் இனப்படுகொலையை நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மியான்மருக்கு உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 mins ago

வாழ்வியல்

9 mins ago

ஜோதிடம்

35 mins ago

க்ரைம்

25 mins ago

இந்தியா

39 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்