தீவிரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு இந்தியா நிதி உதவி செய்கிறது: பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

By ஐஏஎன்எஸ்

பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல் சம்பவங் களுக்கு இந்தியா நிதியுதவி வழங்குவதாக அந்நாட்டு உள் துறை அமைச்சர் சவுத்ரி நிசார் குற்றம்சாட்டி உள்ளார்.

இரு நாடுகளின் தேசிய பாது காப்பு ஆலோசகர்கள் நிலை யிலான பேச்சுவார்த்தை டெல்லி யில் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளார்.

ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்த அதிகாரிகள் மத்தியில் நிசார் பேசியதாவது:

அமைதி பற்றி இந்தியா பேசி வருகிறது. ஆனால் தீவிரவாத செயல்களை அந்த நாடு ஊக்கு விக்கிறது. குறிப்பாக பாகிஸ்தா னில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் இந்தியா உள்ளது. சமீபத்தில் பஞ்சாப் அமைச்சர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் இந்தியாதான் காரணம்.

நமது எதிரியிடமிருந்து (இந்தியா) பணத்தை பெற்றுக் கொண்டு அப்பாவி மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்துபவர்கள் நம் நாட்டில் உள்ளனர். அந்த எதிரிகள் வாகா எல்லையில் தினமும் நம்மை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.

ஒருபுறம் நட்பு பற்றி பேசும் நமது எதிரிகள், மறுபுறம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார்கள். இது குறித்து நமது பாதுகாப்பு அமைப் புகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர் களை நீதியின் முன் நிறுத்துவோம். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் எப்படியாவது நாம் வெற்றி பெற் றாக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

க்ரைம்

14 mins ago

தமிழகம்

23 mins ago

உலகம்

27 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்