ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து குண்டுவெடிப்பு

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து சாலையோரத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் கந்தஹர் மாகாணத்தின் தென் பகுதியில் அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து சாலையோரத்தில் குண்டுவெடிப்பு இன்று (சனிக்கிழமை) நிகழ்ந்தது. இந்தக் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேத விவரங்கள் இதுவரை முழுமையாக வெளிவரவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை தலிபான்கள் நடத்தி இருக்கலாம் என்று ஆப்கன் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் குறித்து தலிபான்கள் தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு அமெரிக்கா - தலிபான்கள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா கேட்டுக் கொண்டதன் பேரில் ஆப்கனில் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

உலகம்

40 mins ago

வணிகம்

57 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

மேலும்