மனித உரிமை மீறல் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை: அமெரிக்க துணை அமைச்சர்களிடம் இலங்கை விளக்கம்

By பிடிஐ

விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் பிரச்சி னைக்கு தீர்வு காண எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து இலங் கையில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள அமெரிக்க துணை அமைச்சர்களிடம் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற அறிக்கையை கடந்த மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டி ருந்தது. எனினும், இலங்கையில் கடந்த ஜனவரியில் புதிதாக பொறுப்பேற்ற அதிபர் சிறீசேனா தலைமையிலான அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க அறிக்கை ஒத்தி வைக்கப்பட்டது. அந்த அறிக்கை வெளியீடுவது அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் (தெற்கு, மத்திய ஆசியா) நிஷா தேசாய் பிஸ்வால் மற்றும் ஜனநாயகம், மனித உரிமை மற்றும் தொழிலாளர் நலத் துறை துணை அமைச்சர் டாம் மலினோவ்ஸ்கி ஆகிய இருவரும் 2 நாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளனர். இவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கல சமரவீராவை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு குறித்து சமரவீரா கூறியதாவது:

இலங்கையில் இப்போது அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. மனித உரிமை மீறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து அவர்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தேன்.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மற்றும் சட்டத்தை வலுப்படுத்துவது தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோ சனை நடத்தினோம். நல்லாட்சி, மனித உரிமையை மதிப்பது மற்றும் பொருளாதாரத்தை வலுப் படுத்துவது உள்ளிட்ட அரசின் அனைத்து நோக்கத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்பதன் ஒரு பகுதியாகவே இந்த சந்திப்பு அமைந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

16 mins ago

சினிமா

22 mins ago

வணிகம்

4 mins ago

இந்தியா

16 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

சினிமா

17 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

55 mins ago

இந்தியா

51 mins ago

மேலும்