மலாலாவுக்கு 24 மணி நேர பாதுகாப்பு

By பிடிஐ

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாயின் உயிருக்கு அச்சுறுத் தல் எழுந்துள்ளதால் அவருக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியைச் சேர்ந்த மலாலா பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடினார். இதனால் கடந்த 2011-ம் ஆண்டில் அவர் 14 வயது சிறுமியாக இருந்தபோது தலிபான் தீவிரவாதிகள் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த அவர் மேல்சிகிச்சைக்காக பிரிட்டனின் பர்மிங் ஹாம் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உடல்நலம் தேறிய பிறகு அந்த நகரிலேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டிஷ் அரசு வட்டாரங்கள் கூறியபோது, அமைச்சர் களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு மலாலாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

11 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

20 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்