ஈரானில் மிதமான நிலநடுக்கம்

By செய்திப்பிரிவு

ஈரானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியது.

இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “ஈரானில் புஷெர் அணுமின் உலை அருகே இன்று (புதன்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோ மீட்டர்” என்று தெரிவித்துள்ளது.

மிதமான நிலநடுக்கம் என்பதால் லேசான அதிர்வுகள் மட்டும் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2017 ஆம் ஆண்டு இராக் - ஈரான் எல்லையில் ரிக்டர் அளவில் 7.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2003 ஆம் ஆண்டு ஈரானில் கெர்மன் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 23,000 பேர் பலியாகினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 mins ago

தமிழகம்

52 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்