சீனாவுக்கு கடனா?-  உலக வங்கியை விமர்சித்த ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

சீனாவிக்கு கடன் வழங்கும் உலக வங்கி முடிவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஏன் உலக வங்கி சீனாவுக்கு கடன் வழங்குகிறது. இது சாத்தியமா? சீனாவிடம் ஏராளமான பணம் இருக்கிறது. இதனை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

ஐந்தாண்டுக்கான குறைந்த வட்டியில் கடன் திட்டத்துடன் சீனாவிற்கு நிதி வழங்க உலக வங்கி சமீபத்தில் ஒப்புக் கொண்டது. இதனைத் தொடர்ந்து உலக வங்கியை ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

மேலும், அமெரிக்க வரி பணத்தை பயன்படுத்தி, மனித உரிமைகள் மீறல் மற்றும் பலவீனமான நாடுகளில் ராணுவ ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் பணக்கார நாடுகளுக்கு உலக வங்கி கடன் வழங்கக்கூடாது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகம் தொடர்பாக பனி போர் நிலவி வரும் நிலையில் சீனாவுக்கு கடன் வழங்கும் உலக வங்கி முடிவை அமெரிக்கா விமர்சித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்