இந்தியா- பாக். ராணுவ அதிகாரிகள் பேச்சிலும் சிக்கல்

By பிடிஐ

இந்தியா பாகிஸ்தான் இடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையிலான பேச்சுவார்த்தை ரத்தானதை தொடர்ந்து, ராணுவ உயரதிகாரிகள் அளவிலான பேச்சு வார்த்தை நடப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையில் பங்கேற்க டெல்லி வரும் பாகிஸ் தான் தேசிய பாதுகாப்பு ஆலோ சகர் சர்தாஜ் அஜிஸ், காஷ்மீர் பிரிவினைவாதிகளைச் சந்திக்கக் கூடாது என இந்தியா நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை ஏற்க மறுத்த பாகிஸ்தான் பேச்சு வார்த்தையை ரத்து செய்தது.

இந்நிலையில், இரு நாடுகளின், ராணுவ தலைமை இயக்குநர் (ராணுவ செயல்பாடுகள்- டிஜிஎம்ஓ) மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் ஆகியோர் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடப்பதும் உறுதி யற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எல்லைப்பாதுகாப்புப் படை தலைவர்கள் இடையிலான பேச்சு வார்த்தை செப்டம்பர் 6-ம் தேதி யும், அதன் பிறகு, ராணுவ தலைமை இயக்குநர்கள் (ராணுவ செயல்பாடுகள்) அளவிலான பேச்சுவார்த்தையும் நடைபெறும் என பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

விளையாட்டு

24 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

27 mins ago

சினிமா

30 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

37 mins ago

தொழில்நுட்பம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்