மாலியில் ஹெலிகாப்டர் விபத்து: 13 ராணுவ வீரர்கள் பலி

By செய்திப்பிரிவு

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ ஹெலிகாப்டர் மோதலில் பிரான்ஸ் ராணுவ வீரர்கள் 13 பேர் பலியாகியுள்ளனர். இதனை பிரான்ஸ் அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "ஆப்பிரிக்க நாடான மாலியில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பிரான்ஸ் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட விபத்தில் 13 பிரான்ஸ் வீரர்கள் பலியாகினர். பலியானவர்களில் 6 பேர் ராணுவ அதிகாரிகள்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கடந்த 10 ஆண்டுகளில் தாங்கள் சந்தித்த பெரும் உயிரிழப்பு என்று பிரான்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.
வீரர்களின் உயிரிழப்புக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்வதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக பிரான்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு மாலியில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமானது. எனவே, மாலியில் ஐஎஸ் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை பிரான்ஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்