ரூ.63 ஆயிரம் கோடி செலவில் சீனா உதவியுடன் பாகிஸ்தானில் புதிய அணு மின் நிலையம்: கட்டுமான பணியை நவாஸ் ஷெரீப் தொடங்கி வைத்தார்

By பிடிஐ

பாகிஸ்தானில் சீன உதவியுடன் ரூ.63 ஆயிரம் கோடி செலவில் புதிய அணு மின் நிலைய கட்டுமான பணி நேற்று தொடங்கப்பட்டது.

கராச்சி அருகே அணுமின் நிலையம் ஏற்கெனவே உள்ளது. இப்போது அதே பகுதியில் 2-வது அணு மின் உலை அமைக்கப்பட உள்ளது. அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று இதனை தொடங்கி வைத்தார். இங்கிருந்து 1,100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய நவாஸ் ஷெரீப், பாகிஸ் தானுக்கும் சீனாவுக்கும் உள்ள நெருக்கமான நட்பின் அடை யாளமே இந்த அணு மின் நிலைய திட்டம்.

பாகிஸ்தானுக்கு தொடர்ந்து பல்வேறு வழிகளில் உதவிகளை செய்து ஆதரித்து வரும் சீனாவுக்கு நன்றி தெரி வித்துக் கொள்கிறேன். தொடர்ந்து அணு மின் திட்டங்களை நிறை வேற்றி வருவதன் மூலம் பாகிஸ் தான் அணு சக்தி நிறுவனம் சிறப் பாக செயல்பட்டு வருகிறது. அடுத்த தாக மூன்றாவது கராச்சி அணு மின் திட்டம் சீனாவின் உதவியுடன் தொடங்கப்படும் என்றார்.

இந்த அணு மின் திட்டத்துக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப் புத் தெரிவித்து வந்தனர். இத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். எனினும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இந்த அணு மின் திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் மின் தட்டுப்பாடு மிக அதிகம் உள்ளது. அது பொது மக்களின் அன்றாட வாழ்க்கையை மட்டுமின்றி தொழில் வளர்ச்சி யையும் வெகுவாக பாதித்து வருகிறது. எனவே அந்நாட்டு அரசு அணுமின் திட்டங்கள் மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க ஆர்வம் காட்டி வருகிறது.

அணு மின் திட்ட விஷயத்தில் இந்தியாவுக்கு ரஷ்யா உதவி வருவதுபோல, பாகிஸ்தானுக்கு சீனா தொடர்ந்து உதவி வருகிறது. இந்தியாவுடன் எப்போதும் மோதல் போக்கை கொண்டுள்ள சீனா, இந்தியாவின் எதிரி நாடாக கருதப்படும் பாகிஸ்தானுடன் நீண்டகாலமாக நெருங்கிய நட்புடன் இருந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

53 mins ago

ஜோதிடம்

58 mins ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுலா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்