ஈரானில் தொடரும் போராட்டம்: 3 பாதுகாவலர்கள் பலி

By செய்திப்பிரிவு

ஈரானில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக, போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த போராட்டத்தில் ஈரான் பாதுகாவலர்கள் 3 பேர் பலியாகியுள்ளனர்.

ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சுமார் 80,000க்கும் அதிகமானவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வன்முறை நீடிக்கிறது. இதுவரை இப்போராட்டத்திற்கு 38 பேர் பலியாகினர்.

இந்நிலையில் ஈரானில் நிலவும் போராட்டத்தால் நாட்டில் பாதுகாப்பின்மை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி எச்சரித்த நிலையில் தொடர்ந்து ஈரானில் எரிபொருள் உயர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் விற்பனை மையங்களில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் அலி ரபீ கூறும்போது, “ஈரானில் சமீபத்தில் நடந்த வன்முறைப் போராட்டத்தில் ஈரான் பாதுகாவலர்கள் 3 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

வன்முறையைத் தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஈரான் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்