வடக்குப் பகுதியில் சிரியா தாக்குதல்: இஸ்ரேல் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சிரியாவிலிருந்து இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் ஏவப்பட்ட நான்கு ஏவுகணைகணை எங்கள் படைகள் இடை மறித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில், “சிரியாவிலிருந்து ஏவப்பட்ட நான்கு ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏவப்பட்ட நான்கு ஏவுகணைகளையும் எங்கள் ராணுவப் படையால் இடை மறித்தோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இக்குற்றச்சாட்டுக்கு சிரியா தரப்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.

இஸ்ரேல் மீது சிரியா நடத்திய இத்தாக்குதல் காரணமாக சிரியா - இஸ்ரேல் இடையே பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இஸ்ரேல்- சிரியா இடையே தீவிரவாதத் தாக்குதல் மற்றும் எல்லைப் பிரச்சினை தொடர்பாக அவ்வப்போது இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இரு தரப்பும் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இஸ்ரேலைப் பொறுத்தவரை அந்த நாடு மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானைத் தங்களுக்கான அச்சுறுத்தல் கொண்ட நாடாகக் கருதுகிறது. இதனால் ஈரான் ஆதரவு நிலைப்பட்டைக் கொண்ட சிரியா மீது இஸ்ரேல் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்