போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு: ஈரான் கண்டனம்

By செய்திப்பிரிவு

எரிவாயு பொருட்கள் மீதான விலை உயர்வை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு அளித்திருப்பதை ஈரான் கடுமையாக கண்டித்துள்ளது.

ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சுமார் 80,000க்கும் அதிகமானவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வன்முறை நீடிக்கிறது. இதில் தியாகிகள் சதுக்கத்தில் நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 38 பேர் பலியாகினர்.

இந்த நிலையில் ஈரான் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா துணை இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த ஆதரவை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃப், ‘‘வன்முறையாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்துள்ளது கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவால் பொருளாதார தடைக்கு உள்ளான ஈரான் மக்கள் மீது அமெரிக்கா பரிதாபம் காட்டுவதை பார்க்க ஆர்வமாக உள்ளது. அமெரிக்காவின் பாசாங்குதனத்தை ஈரான் மக்கள் நம்ப மாட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 secs ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்